பீஹாரில் காப்பகம் ஒன்றில் கிட்டத்தட்ட 34 சிறுமிகள் காப்பக அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அரசியல்வாதிகளால் பாலியல் கொடுமை செய்யப்பட்ட சம்பவம் ஏற்கனவே பெரும்பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் பீஹாரிலுள்ள 35 மாவட்டங்களில் டாடா சமூக அறிவியல் கல்விமையம் முஸாப்பூர் சிறுமிகள் காப்பகம் உட்பட அங்குள்ள 110 சிறுவர் காப்பகங்களில் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் 15 காப்பகங்களில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
பீஹாரில் முஸாபர்பூரில் அரசு நிதியுதவியுடன் இயங்கிவந்த தனியார் தொண்டு நிறுவன காப்பகத்தில் சுமார் 7 வயதுமுதல் 17 வயதுடைய 40-க்கும் மேற்பட்ட சிறுமிகள் காப்பக ஊழியர்கள், அதிகாரிகளால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக பிரிஜேஷ் தாக்கர் உட்பட 10-க்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
நாட்டையே உலுக்கிய இந்தசம்பவத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் மொத்தம் இருதுவரை 34 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பீஹாரிலுள்ள 35 மாவட்டங்களில் டாடா சமூகஅறிவியல் கல்விமையம் முஸாப்பூர் உட்பட உள்ள 110 சிறுவர் காப்பகங்களில் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் 15 காப்பகங்களில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது தெரியவந்துள்ளது மேலும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை நிகழ்த்தப்பட்டதில் பல சிறுமிகள் கருவுற்றதாகவும், பல சிறுமிகள் குழந்தை பெற்றுள்ளதகாவும் டாடா சமூக அறிவியல் கல்விமையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது .