சீன அதிபர் ஸீ ஜின்பிங் இந்தியா வருகையை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்.
சீன அதிபர் ஸீ ஜின்பிங் இரண்டு நாள் அரசுமுறை பயணமாக அக்டோபர் 11- ஆம் தேதி இந்தியா வருகிறார். சீன அதிபரின் இந்திய பயணத்தில் முக்கிய பயணமாக கருதப்படுகிறது தமிழக பயணம். இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஸீ ஜின்பிங், அக்டோபர் 11- ஆம் தேதி முதல் அக்டோபர் 12- ஆம் தேதி வரை மாமல்லபுரத்தில் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். மேலும் இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு நட்பு ரீதியிலானது என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதேபோல் உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் மற்றும் காஷ்மீர், இந்தியா- சீனா எல்லை பிரச்சனை குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஸீ ஜின்பிங் விவாதிக்கவுள்ளனர். பின்பு இரு நாட்டு தலைவர்களும் மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலா தளங்களை பார்வையிடுகின்றன. இந்நிலையில் சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை 10,000- க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு வரலாறு காணாத அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் மாமல்லபுரம் கடல் பகுதியில் இரண்டு கப்பல்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.