Skip to main content

ரயில் டிக்கெட்டின் விலை உயருகிறது.... புதிய சேவை கட்டணங்கள் அறிவிப்பு...

Published on 31/08/2019 | Edited on 31/08/2019

ஆன்லைனில் ரயில் டிக்கெட் புக் செய்வதற்கான புதிய சேவை கட்டணத்தை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

 

service charges for online train ticket booking

 

 

பணமதிப்பிழப்புக்கு பின் பணமில்லா டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் 3 ஆண்டுகளாக சேவை கட்டணம் வசூலிப்பது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இனி குளிர்சாதன வசதியற்ற பெட்டிகளுக்கு  முன்பதிவு செய்ய ரூ.15, குளிர்சாதன வகுப்புகளுக்கு ரூ.30 சேவை கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ரூ.20 மற்றும் ரூ.40 சேவைக்கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. பின்னர் இந்த சேவை கட்டணம் வசூலிப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் கட்டணம், முன்பதிவு கட்டணத்துடன் இணைத்து ஜி.எஸ்டி கட்டணமும் தனியே சேரும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்