![fdzbg](http://image.nakkheeran.in/cdn/farfuture/tdPpVcio9iVbnAV_xLDzi9VKfhQvQWStM218bKCvG_g/1546084554/sites/default/files/inline-images/1546057982-ind_vs_aus-in.jpg)
இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. நான்காம் நாளான இன்று இந்திய அணி வலுவான நிலையில் வெற்றியை நோக்கி பயணித்து வருகிறது. தனது இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கில் திணறி வரும் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இன்னும் 3 விக்கெட்டுகள் கையில் உள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு 191 ரன்கள் தேவைப்படுகின்றது. இந்நிலையில் இன்று காலை பேட்டிங் ஆட வந்த ஆஸ்திரேலியா கேப்டன் பெய்னிடம் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் வம்பிழுத்துள்ளார். பெயின் களத்தில் பேட் செய்து கொண்டிருந்தபோது அவருக்கு பின்னால் நின்று கீப்பிங் செய்துக் கொண்டிருந்த ரிஷப் பந்த் அவருக்கு எதிரே பில்டிங்கிற்காக நின்றுக் கொண்டிருந்த ஜடேஜாவிடம், ”நமக்கு இங்கு தற்போது சிறப்பு விருந்தினர் ஒருவர் வந்திருக்கிறார். நீங்கள் எப்போதாவது தற்காலிக கேப்டன்னை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா...? அவருக்கு பேசுவது மிகவும் பிடிக்கும் ..அதுமட்டுத்தான் அவருக்கு தெரியும். பேசுவது மட்டுமே ” என்றார். இந்த வீடியோ தற்பொழுது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
This is what Pant had to say about Tim Paine: #AUSvINDpic.twitter.com/vWqvqT93LI
— cricketnext (@cricketnext) December 29, 2018