கரோனா இரண்டாம் அலை இன்னும் முடியவில்லை என மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு கட்ட ஊரடங்கிற்கு பிறகு கரோனா இரண்டாம் அலை தாக்கம் ஒவ்வொரு மாநிலத்திலும் குறைந்து வந்த நிலையில், கரோனா தடுப்பூசியின் முக்கியத்துவம் அறிந்து பொதுமக்கள் ஆர்வமாக தடுப்பூசிகளைச் செலுத்தி வருகின்றனர். கரோனா மூன்றாம் அலை தொடர்பான விவாதங்கள் எழுந்திருக்கும் நிலையில், கரோனா இரண்டாம் அலையே இன்னும் முடியவில்லை என மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், "4 லட்சத்திற்கு அதிகமானோர் கரோனா சிகிச்சையில் உள்ளனர் என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும். கேரளாவில் மட்டும்தான் அதிக நபர்கள் கரோனா சிகிச்சையில் உள்ளனர். தேசிய அளவில் கரோனா சிகிச்சைபெறும் மாநிலங்களில் தமிழகம் 5வது இடத்தில் உள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடக ஆகிய மாநிலங்களில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கரோனா இரண்டாம் அலை இன்னும் முடியவில்லை" என்றார்.