Published on 19/01/2019 | Edited on 19/01/2019
![bb](http://image.nakkheeran.in/cdn/farfuture/c3HmaHike5y79Va8R82P7xuNJIE_rRkXQmuWzRuKPwg/1547903788/sites/default/files/inline-images/brila.jpg)
குஜராத்தில் நடைபெற்ற உலக முத்லீட்டாளர் மாநாட்டில் கலந்துகொண்ட ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்களம் பிர்லா, அடுத்த மூன்று ஆண்டுகளில் குஜராத் மாநிலத்தில் ஆதித்யா பிர்லா குழுமம் ரூ. 15 ஆயிரம் கோடியை முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே இருக்கும் ஆலையின் விரிவாக்கம் மற்றும் புதிய ஆலைகள் தொடங்குவது போன்றவற்றில் இந்த முதலீடானது இருக்குமெனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதுவரை பிர்லா குழுமம், குஜராத்தில் மட்டும் ரூ. 30,000 கோடி முதலீடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.