Published on 30/01/2021 | Edited on 30/01/2021
![Refusal to make Judge Pushpa a permanent judge](http://image.nakkheeran.in/cdn/farfuture/Qe2u0TKFWxwC1mNsieDFbo_Us7s-kkWx01VcDAhrumI/1611984283/sites/default/files/inline-images/353_5.jpg)
பாலியல் வழக்குகளில் சர்ச்சையான தீர்ப்பு வழங்கிய நாக்பூர் கிளை நீதிபதி புஷ்பாவை நிரந்தர நீதிபதியாக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சை தீர்ப்புகள் கொடுத்து பல சர்ச்சைகளில் சிக்கியவர் நாக்பூர் கிளை நீதிபதி புஷ்பா கானோதிவாலா. இவர் சில பாலியல் வழக்குகளில் குற்றவாளிகளுக்கு சாதகமாக தீர்ப்பளித்து சர்ச்சையில் சிக்கினார். முன்னதாக அவரை நிரந்தர நீதிபதியாக நியமிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற கொலிஜியம் தெரிவித்திருந்த நிலையில், அந்தப் பரிந்துரையை தற்போது திரும்பப் பெற்றுள்ளது.
அண்மையில், ஆடைக்கு மேல் தீண்டுவது பாலியல் சீண்டல் ஆகாது என தீர்ப்பளித்து சர்ச்சையில் சிக்கியவர் நீதிபதி புஷ்பா என்பது குறிப்பிடத்தக்கது.