ரிசர்வ் வங்கி ஊழியர்கள் வரும் செப்டம்பர் 4 மற்றும் 5 ஆகிய இரு தினங்களுக்கு மொத்தமாக விடுமுறை எடுக்கப்போவதாக அறிவித்துள்ளனர். வெகுநாட்களாகவே ஓய்வூதியம் பற்றி மத்திய அரசிடம் பேசியும், எந்த மாற்றமும் இல்லாததால் இந்த முடிவை எடுத்திருப்பதாக அறிவித்துள்ளனர். மேலும் வருங்கால வைப்புநிதி முறையை பென்ஷன் திட்டமாக்கவும், 2012-க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு இந்த வைப்புநிதி தொகையின் அளவை உயர்த்தவும் ஆகிய இரண்டு முக்கிய கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.
ரிசர்வ் வங்கியின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் முன்னணி (UFRBOE) உறுப்பினரும், அனைத்து இந்திய ரிசர்வ் வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சமீர் கோஷ் "இது தொடர்பாக 2017 அக்டோபர் மாதமே ஆர்.பி.ஐ. கவர்னர் உர்ஜிட் பட்டேல் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியும் அவர்கள் கண்டுகொள்ளாததை அடுத்தே இந்த முடிவுக்கு வந்திருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.