மகராஷ்டிரா மாநிலம், பால்கர் விரார் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு, கடந்த ஜனவரி 9, 2023ஆம் ஆண்டு அடையாளம் தெரியாத நான்கு பேர் அத்துமீறு நுழைந்து வீட்டில் வசிப்பவர்களை கட்டிப்போட்டு, கத்தி முனையில் மிரட்டியுள்ளனர். மேலும், வீட்டில் இருந்த ரூ.1.33 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் ரூ.25,000 பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில், கொள்ளை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளைப் பிடிக்க தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த 2005ஆம் தேதி குற்றவாளிகளான நான்கு பேரில் ஒருவரான சுஜினாத் என்பவரை போலீசார் கைது செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். ஆனால், தலைமறைவாக இருக்கும் மீதமுள்ள 3 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், குற்றச் செயல்களில் ஈடுபட்ட பாபுராவ் அன்னா காலே (55) என்பவர் தன்னுடைய அடையாளத்தை மறைத்து ஜல்னாவில் உள்ள கிராமத்தில் தலைமறைவாக இருக்கிறார் என்ற தகவல் ஒரு மாதத்திற்கு முன்பு போலீசாருக்கு தெரியவந்தது.
அதன்படி, அந்த கிராமத்திற்குச் சென்ற போலீசார், தலைமறைவாக இருக்கும் பாபுராவ் அன்னா காலேவை கைது செய்தனர். இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், ஜல்னா மற்றும் சத்ரபதி சாம்பாஜி நகரில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு மற்றும் கொலை முயற்சி உள்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் காலே மீது பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரியவந்தது. 2003ம் ஆண்டு கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மேலும் இருவர் தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படுகிறது. திருட்டு மற்றும் கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்த ஒருவரை, 21 ஆண்டுகளுக்குப் பிறகு போலீசார் கைது செய்துள்ளனர்.