Published on 13/04/2018 | Edited on 13/04/2018
உத்திரப்பிரதேசத்தில் உள்ள பாடாவ்ன் மாவட்டத்தில் கெடி சௌக் ஏரியாவில் அமைக்கப்பட்டிருக்கும் அம்பேத்கர் சிலைக்கு இரும்பினால் செய்யப்பட்ட கேட் போடப்பட்டு அதற்கு காவலர் ஒருவரும் பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது அந்தப் புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து காவல்துறை உயர் அதிகாரி வீரேந்திர சிங் யாதவ் கூறியது :
நாளை அம்பேத்கர் ஜெயந்தி என்பதால் ஒரு சில சமூக விரோதிகள் சிலையை உடைத்து சேதப்படுத்தக்கூடும். அதனால் 24 மணி நேரமும் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதற்கு முன் சென்ற வாரம் இதே மாவட்டத்தில் பகுஜன் சமாஜ்வாதி கட்சி பிரமுகர் வைத்த அம்பேத்கர் சிலைக்கு காவி நிறம் பூசியது பெரும் சர்ச்சையானது. அதற்கு பிறகு நீல நிறம் பூசப்பட்டது.