Skip to main content

100 நாட்களை நெருங்கும் ராகுலின் ஒற்றுமை பயணம்; சிறப்பாகக் கொண்டாட காங்கிரஸ் முடிவு

Published on 13/12/2022 | Edited on 13/12/2022

 

கத

 

தற்போதைய பாஜக அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை 'ஒற்றுமை பயணம்' எனும் தலைப்பில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தலைமையில் செப்டம்பர் 8ம் தேதி தொடங்கிய நடைப்பயணம் இன்றுடன் 99 நாட்களை நிறைவு செய்துள்ளது.

 

தமிழகத்தில் துவங்கிய அவரின் நடைப்பயணம் கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் எனத் தொடர்ந்துகொண்டே செல்கிறது. அவரின் நடைப்பயணத்தில் அதிக அளவிலான தொண்டர்கள் கலந்துகொண்டு அவரை உற்சாகப்படுத்தி வருகிறார்கள்.

 

இந்நிலையில், இந்த நடைப்பயணம் காங்கிரஸ் கட்சிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் நல்ல மாற்றத்தைக் கொடுக்கும் என்று அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் தொடர்ந்து கூறிவரும் நிலையில்,  இந்த ஒற்றுமை பயணத்தின் 100ஆவது நாளை சிறப்பாகக் கொண்டாட காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக ஜெய்ப்பூரில் பிரபல பாடகர் சுனிதி சவுகான் தலைமையிலான இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளதாகக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்