/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/modi ji.jpg)
பிரதமர் மோடி, இன்று சத்தீஸ்கர், ஒடிசா மாநிலங்களுக்குச் சென்று பல்வேறு நலத் திட்டங்களைத் தொடங்கி வைக்க உள்ளார். முதலில் ஒடிஷா செல்பவர், அங்கிருக்கும் தால்ச்சர் உரத் தொழிற்சாலையைப் புதுப்பிக்கும் பணியை தொடங்கி வைக்கவுள்ளார். இதையடுத்து, மோடி ஜார்ஸுகுடாவுக்குச் சென்று அங்கு அமைக்கப்பட்டுள்ள புதிய விமான நிலையத்தைத் தொடங்கி வைக்கிறார். பின்னர் அவர் கர்ஜன்பாகல் நிலக்கரி சுரங்கத்தையும், ஜார்ஸுகுடா-பரபளி-சார்டேகா ரயில் பாதைத் திட்டங்களையும் தொடங்கிவைக்கிறார்.
இதைத் தொடர்ந்து சத்தீஸ்கருக்கு செல்கிறார் மோடி. அங்கிருக்கும் ஜான்கிர் சம்பா மாவட்டத்திற்குச் சென்று, கைத்தறி மற்றும் வேளாண் கண்காட்சியைத் தொடங்கி, பின் பெந்த்ரா-அனுப்புர் 3வது ரயில் பாதை மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார் மோடி. இறுதியாக அங்கு நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/18057647_719886548191985_4542912737982370865_n.jpg)