நேற்று டெல்லியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் இலவச அரவணைப்பு முகாம் நடித்தியுள்ளனர்.
கடந்த ஜூலை 20 ஆம் தேதி, மக்களவையில் நடந்த நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியை அரவணைத்தார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பரவலாக பேசப்பட்டு வந்தது. ராகுல் கட்டிப்பிடிக்கும் வீடியோ அதேபோல வைரலானது.
இந்த முகாமில் 50 காங்கிரஸ் தொண்டர்கள் கையில் பலகைகள் பிடித்து, அதில் 'பகையை அகற்று, நாட்டை காப்பாற்று' என்று முழக்கங்கள் எழுதி பிரச்சாரம் செய்துள்ளனர். முகாமுக்கு வந்த பொதுமக்களை காங்கிரஸ் தொண்டர்கள் அரவணைத்து அன்பை பரப்பியுள்ளனர்.
இந்த முகாமை தலைமை ஏற்று நடத்திய காங்கிரஸ் கட்சி தொண்டர் அனிருத் ஷர்மா கூறுகையில்," எங்களுடைய நோக்கம் இந்த நாட்டில் இருக்கும் பகையை அகற்றுவதும், நாட்டை காப்பாற்றுவதும்தான். அதேபோல நாங்கள் மக்களிடம் மதங்களை பார்க்காமல் நம்பிக்கையாகவும், இனக்காமாகவும் வாழுங்கள் என்றும் இதன்மூலம் தெரிவிக்கிறோம். ராகுல் காந்தி மோடியை அரவணைத்ததிற்கு காரணம் அன்பை பரப்புவதுதான். அதை நாங்கள் முன்னெடுத்து பரப்புகிறோம்" என்றார்.