தேசிய குடிமக்கள் பதிவேடு நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் திட்டம் அல்ல, தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக அமைச்சரவையிலும், நாடாளுமன்றத்திலும் விவாதிக்கவில்லை என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த நேர்காணலில்,
என்.ஆர்.சி எனப்படும் தேசிய மக்கள் பதிவேடு குறித்து அமைச்சரவையிலும், நாடாளுமன்றத்தில் விவாதிக்கவில்லை. என்.ஆர்.சி எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கும், என்.பி.ஆர் எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேடுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்தும் திட்டமோ, விவாதமோ தற்போது இல்லை.
தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்காக பெறப்படும் தகவல்கள் என்.ஆர்.சிக்கு பயன்படுத்தப்படாது. உங்களுடைய அரசியலுக்காக ஏழைகளின் வளர்ச்சிக்கு தடையாக இருக்காதீர்கள். கிழக்கில் சூரியன் உதிக்கும் என்று நாங்கள் சொன்னால் மேற்கில் உதிக்கும் என்று ஓவைசி கூறுவார். பாஜக எதை சொன்னாலும் அதற்கு எதிராகவே ஓவைசி கூறுவார்.
தேசிய மக்கள் தொகை பதிவேடுக்காக பெறப்படும் தகவல்கள் என்.ஆர்.சிக்கு பயன்படுத்தப்படாது. எனவே மக்கள் தொகை பதிவேட்டை அமல்படுத்த மாட்டோம் என்ற முடிவை கேரளம், மேற்குவங்காளம் பரிசீலிக்க வேண்டும் என விளக்கமளித்துள்ளார் அமித்ஷா.