மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி 70க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் 74 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. நேற்று விவசாயிகள் சார்பில் 'ஜக்கா ஜாம்' எனும் நெடுஞ்சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த 'ஜக்கா ஜாம்' சாலை மறியல் டெல்லி, உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் நடத்தப்படவில்லை. ஆனால் நாட்டின் மற்ற இடங்களில் இந்த போராட்டம் நேற்று நடைபெற்றது.
இந்நிலையில் நேற்று விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது பயன்படுத்தப்பட்ட கொடி தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பஞ்சாபின் லூதியானாவில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் ஒரு டிராக்டரில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் பிந்தரன்வாலே உருவத்தை ஒத்த கொடி ஒன்று பறந்தது. இது கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தடைசெய்ய செய்யப்பட்டவற்றை காட்டியிருந்தால் தவறு என பாரதிய கிசான் சங்கம் தலைவர் ராகேஷ் தெரிவித்துள்ளார்.