கேரள மாநிலம் வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் நவம்பர் 13-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சி சார்பாக பிரியங்கா காந்தி போட்டியிட்டுள்ளார். அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சத்யன் மோக்கேரி மற்றும் பா.ஜ.க வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர். முதல் முறையாக தேர்தல் அரசியலில் குதித்திருக்கும் பிரியங்கா காந்தி, வயநாடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்போடு சூராவளி பிரச்சாரம் செய்து வருகிறார்.
அந்த வகையில், வயநாடு தொகுதிக்குட்பட்ட ஒரு இடத்தில் பிரியங்கா காந்தி பேசியதாவது, “வயநாடு மக்களுக்கு சேவை செய்வதில் உள்ள உணர்வு, ஒரு தாய் தனது குழந்தைகள் மீது காட்டும் அன்பை போல் உணர்கிறேன். எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால், வயநாடு மக்களுக்காக நாடாளுமன்றத்தில் மட்டுமல்ல, மற்ற எல்லா இடத்திலும் போராடுவேன். தனது சகோதரர் ராகுல் காந்தி வயநாடு மக்கள் மீது வைத்திருக்கும் அன்பை குறிப்பிட்டார்.
எங்களுடைய குடும்பத்தின் மீது நீங்கள் காட்டிய அன்புக்காக உங்களுக்காக என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன். பாஜக தலைமையிலான மத்திய அரசு, நாட்டில் உள்ள விவசாயிகள், சிறு வணிக உரிமையாளர்களுக்கு தீங்கு விளைவித்துள்ளது” என்று கூறினார்.