Skip to main content

கார்கில் போர் வெற்றி தினம்: திராஸுக்கு பதிலாக பாரமுலா செல்லும் குடியரசு தலைவர்!

Published on 26/07/2021 | Edited on 26/07/2021

 

president ram nath kovind

 

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நான்கு நாட்கள் பயணமாக ஜம்மு காஷ்மீருக்குச் சென்றுள்ளார். நேற்று (25.07.2021) காஷ்மீர் சென்ற அவர், இன்று கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு, லடாக்கின் திராஸ் பகுதியில் உள்ள போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதாக இருந்தது. இந்தநிலையில், இந்தப் பயணத்திட்டத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

 

மோசமான வானிலை நிலவுவதால் திராஸ் பகுதியில் உள்ள போர் நினைவிடத்திற்குப் பதிலாக, பாரமுலாவில் உள்ள போர் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அஞ்சலி செலுத்துவார் என இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்பிறகு நாளை நடைபெறும் காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் உரையாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'ஒரே நாடு; ஒரே தேர்தல்' - 5 ஆயிரம் பேர் கருத்து தெரிவிப்பு

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
ONE NATION ONE ELECTION 5 thousand people comment

'ஒரே நாடு; ஒரே தேர்தல்' தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தர முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி சிறப்புக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்திருந்தது. இந்தக் குழு மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து ஆய்வு செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தக் குழுவில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை குழுத் தலைவர் ஆதிரஞ்சன் சவுத்ரி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத், திட்டக்குழுவின் முன்னாள் தலைவர் என்.கே. சிங், மக்களவையின் முன்னாள் செயலாளர் சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

அதே சமயம் ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்துவது குறித்து விரைவாக அறிக்கை அளிக்க இக்குழுவிற்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. இந்தச் சூழலில் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி (23.09.2023) ராம்நாத் கோவிந்த் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்த பூர்வாங்க நடவடிக்கை மேற்கொள்வது பற்றியும், இந்தத் திட்டம் செயல்படுத்துவது குறித்தும் இந்த குழு தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது. அந்த வகையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்துவது தொடர்பாகப் பொதுமக்களிடம் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற முறையில் தேர்தல் நடத்துவது குறித்து ஜனவரி 15 ஆம் தேதிக்குள் பொதுமக்கள் கருத்து கூறலாம் எனக் கடந்த 5 ஆம் தேதி தெரிவிக்கப்பட்டிருந்தது. ஒரே நேரத்தில் நாடு முழுவதும் தேர்தல் நடத்த ஏதுவாக தற்போதைய சட்டங்களில் திருத்தம் மேற்கொள்வது, நிர்வாக கட்டமைப்புகளில் மாற்றம் செய்வது குறித்து பொதுமக்கள் ஆலோசனை கூறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து பொதுமக்கள் தங்களது ஆலோசனைகள், கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை onoe.gov.in அல்லது sc-hic@gov.in என்ற மின்னஞ்சலில் அனுப்பலாம் என ஒரே நாடு, ஒரே தேர்தல் குழுவின் செயலாளர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவுக்கு இதுவரை சுமார் 5000 பேர் தங்களது கருத்துகளைத் தெரிவித்துள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

ஒரே நாடு,ஒரே தேர்தல்; ராம்நாத் கோவிந்த்தை சந்திக்கும் சட்ட ஆணைய உறுப்பினர்கள்

Published on 25/10/2023 | Edited on 25/10/2023

 

One country, one election; Members of the Law Commission meet Ram Nath Kovind
கோப்புப்படம்

 

பல வருடங்களாகவே 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' என்ற கூற்றை மத்திய பாஜக அரசு வெளிப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தர சிறப்புக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்திருந்தது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில், இந்த குழு அமைக்கப்பட்டது. மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து இந்த குழு ஆய்வு செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

அதனைத் தொடர்ந்து முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் 8 பேர் கொண்ட உறுப்பினர்களை நியமித்து அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இந்த குழுவில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை குழுத் தலைவர் ஆதிரஞ்சன் சவுத்ரி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம்நபி ஆசாத், திட்டக்குழுவின் முன்னாள் தலைவர் என்.கே. சிங், மக்களவையின் முன்னாள் செயலாளர் சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். அதே சமயம் ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்துவது குறித்து விரைவாக அறிக்கை அளிக்க இக்குழுவிற்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது.

 

இந்த சூழலில் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி (23.09.2023) ராம்நாத் கோவிந்த் தலைமையில் டெல்லியில் உள்ள ஜோத்பூர் விடுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குலாம் நபி ஆசாத் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்த பூர்வாங்க நடவடிக்கை மேற்கொள்வது பற்றி ஆலோசிக்கப்பட்டதாகவும், இந்தத் திட்டம் செயல்படுத்துவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

 

One country, one election; Members of the Law Commission meet Ram Nath Kovind

 

இந்நிலையில் 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' குறித்து ராம்நாத் கோவிந்த் தலைமையில் இரண்டாவது மற்றும் அடுத்தகட்ட ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று (25.10.2023) நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தேசிய சட்ட ஆணையத்தின் உறுப்பினர்கள் மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்த தங்களது பரிந்துரையை ராம்நாத் கோவிந்த்திடம் வழங்குவார்கள் எனவும், அதனை தொடர்ந்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.