அந்தமானிலுள்ள, செண்டினல் பழங்குடியின மக்கள் இருக்கும் தீவுக்கு அனுமதியின்றி நுழைந்த அமெரிக்கரை, அங்கிருந்த பழங்குடியின மக்கள் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜான் அலன் சாவ் என்ற 27 வயது அமெரிக்கர் செண்டினல் தீவில் உள்ள பழங்குடியின மக்களுக்கு மதத்தை பரப்புவதற்காக சென்றுள்ளார். 7 மீனவர்களின் உதவியோடு அந்த தீவுக்கு சென்றுள்ளார்.
பழங்குடியின மக்களை பற்றி அறிந்திருந்ததால் தீவுக்குள் மீனவர்கள் வரவில்லை, பயத்தில் அவரை கரையிலேயே விட்டு சென்றுள்ளனர். உள்ளே சென்ற ஜானை பார்த்ததுமே பழங்குடியின மக்கள் கையில் வைத்திருந்த வில்லில் அம்பை ஏந்தி கொலை செய்துவிட்டதாக போலிஸ் விசாரணையில் அமெரிக்கர் தீவுக்குள் செல்ல உதவியாக இருந்த மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜானின் மீது அம்பு பாய்ந்ததும், பாய்ந்த வில்லுடன் ஓடியுள்ளார். பிறகு அவர் இறந்ததும், பழங்குடியின மக்கள்அவரது உடலை கையிறு கட்டி தரையிலேயே இழுத்து வந்து கடல் கரையில் போட்டிவிட்டதாக தெரிவித்துள்ளனர். விசாரணையில், இந்த வருடத்தில் மட்டுமே ஐந்து முறை அந்தமானுக்கு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் அந்த பழங்குடியின மக்களை மதமாற்றம் செய்வதில் மும்முரமாக இருந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.