நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்க்க போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அடுத்ததாக தேசிய மக்கள்தொகை பதிவேடு திட்டத்திற்கும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
தேசிய மக்கள்தொகை பதிவேடு வழக்கமாக பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தான் என மத்திய அரசு தெரிவித்தாலும், அச்சம் காரணமாக பல்வேறு தரப்பிலிருந்தும் இதற்கு எதிர்ப்பு எழுந்து வருகிறது. இந்த நிலையை, பிரசாந்த் கிஷோர் இதுகுறித்து பேட்டியளித்துள்ளார்.
அதில், "என்ஆர்சிக்கும், என்பிஆருக்கும் எந்த தொடர்பும் இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுகிறார். இது வேடிக்கையாக இருக்கிறது. என்ஆர்சியும், என்பிஆரும் தொடர்புடையது என்பதை ஆவணங்களே சொல்கின்றன. என்ஆர்சியின் முதல்கட்ட நடவடிக்கைதான் என்பிஆர். ஒட்டுமொத்த என்ஆர்சியும், என்பிஆரும், குடியுரிமை மசோதா 2003 உடன் தொடர்புடையது. இது நிச்சயம் விவாதத்திற்கு உரியது" என தெரிவித்துள்ளார். மேலும், "தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஏன் இதுவரை எந்தவிதமான கருத்தும் தெரிவிக்கவில்லை" எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.