Skip to main content

மஹாராஷ்டிரா துணைமுதல்வராக அஜித் பாவர் மீண்டும் பதவியேற்கிறார்...!

Published on 30/12/2019 | Edited on 31/12/2019

மஹாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி கட்சிகள், சிவசேனா தலைமையில் ஆட்சியமைக்க முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில், திடீரென யாருமே எதிர்பார்க்காத வகையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் பாஜகவுடன் கை கோர்த்தார். 

 

ajit-pawar-may-return-as-deputy-cm

 



இதையடுத்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பாஜக ஆட்சி அமைத்தது. இதில் அஜித் பவார் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றார். இந்நிலையில் ஆட்சியமைக்க அழைத்த ஆளுநரின் உத்தரவை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சிகள் மனு தாக்கல் செய்தன. இதில் உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம், மஹாராஷ்டிராவில் 27-11-19 நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பாஜக தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என அறிவித்தது.

இந்த சூழலில் அஜித் பவார் தனது துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, தேவேந்திர பட்னாவிஸும் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இது மஹாராஷ்ரா அரசியல் வட்டாரத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. பின்னர் மூன்று கட்சிகளின் கூட்டணி உறுதியாகி சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்றார். மூன்று கட்சிகளில் இருந்தும் 6 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

இந்நிலையில், உத்தவ் தாக்கரே தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் துணை முதல்வராக அஜித்பவார் மீண்டும் பதவியேற்கிறார். அவருடன் 35 பேர் அமைச்சர்களாக பதவியேற்கின்றனர். 
 

சார்ந்த செய்திகள்