Skip to main content

பிளாஸ்டிக்கிற்கு திருப்பதியில் டாட்டா!

Published on 31/10/2018 | Edited on 31/10/2018
tirupathi


திருப்பதி கோவிலில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தேவஸ்தானம் நாளை முதல் தடை விதித்துள்ளது.  கடந்த அக்டோபர் 2ஆம் தேதி, ஆந்திராவிலுள்ள திருப்பதி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து திருப்பதி கோவிலிலும் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவோருக்கு ரூ. 5000 முதல் ரூ. 25,000  வரை அபராதம் விதிக்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. தற்போது லட்டுகளை போட்டுத் தரும் கவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யும் வரை லட்டு கவர்களை மட்டும் பயன்படுத்த தேவஸ்தானம், நகராட்சி அதிகாரிகளிடம் அனுமதி கோரியுள்ளது.
 

சார்ந்த செய்திகள்