மின்வசதியே இல்லாத ஒரு கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு மின்கட்டணம் செலுத்த கூறி ரசீது அனுப்பப்பட்டிருப்பது அக்கிராம மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்திலுள்ள சனாவால் கிராமத்தில் பட்டேரி பாரா என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் எந்த வீட்டிலும் மின்வசதியே இல்லாத நிலை நிலவி வருகிறது. இரவு நேரங்களில் வெளிச்சத்திற்காக விளக்குகளை மட்டுமே பயன்படுத்திவரும் இந்த கிராம மக்களுக்கு அம்மாநில அரசு சமீபத்தில் அதிர்ச்சி ஒன்றை அளித்துள்ளது.
மின்னிணைப்பே இல்லாத அங்குள்ள மக்களின் வீடுகளுக்கு மின்கட்டணம் செலுத்துமாறு ரசீது அனுப்பியுள்ளது. இதனால் குழப்பமடைந்த அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் முறையிட முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பல்ராம்பூர் மாவட்ட ஆட்சியர் சஞ்சீவ் ஜா, "இந்தச் சம்பவத்தை பற்றி நானே ஊடகங்கள் வாயிலாகத்தான் நான் பத்திரிகைகள் மூலமாகவே தெரிந்து கொண்டேன். இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவு விட்டுள்ளேன். விசாரணைக்கு பின்பு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.