Published on 03/01/2019 | Edited on 03/01/2019

உத்திரபிரதேச மாநிலத்தில் பசுக்களின் பாதுகாப்பிற்காக பசு பாதுகாப்பு வரி என்ற புதிய வரியை அறிமுகம் செய்துள்ளது அம்மாநில அரசு. அதன்படி 0.5 சதவீதம் பசு பாதுகாப்பு வரியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு கிராமங்கள்தோறும் பசுக்களை பாதுகாக்கும் கோசாலைகள் அமைக்க உத்தரபிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.ஏற்கனவே அம்மாநிலத்தில் உள்ள 16 கோசாலைகளின் பராமரிப்பிற்காக 18 கொடியை ஒதுக்கியுள்ளது மாநில அரசு. மேலும் இந்த வரிவிதிப்பினால் உருவாகும் கோசாலைகள் மூலம் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த வரித்தொகை மூலம் கிராமங்கள் தோறும் கோசாலைகள் அமைக்கப்பட்டு அதில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.