Published on 02/05/2021 | Edited on 02/05/2021

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி 153 சட்டமன்றத் தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 80 சட்டமன்றத் தொகுதிகளிலும், மக்கள் நீதி மய்யம் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியிலும் முன்னிலையில் உள்ளன.

இந்நிலையில் 153 இடங்களில் முன்னிலையில் திமுக உள்ள நிலையில், வெற்றிமுகத்தில் உள்ள திமுகவிற்கு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.