Published on 30/05/2019 | Edited on 30/05/2019
இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராக இன்று பதவியேற்றுக்கொண்டார் நரேந்திரமோடி. பல்வேறு நாட்டு தலைவர்களும், மத தலைவர்களும் , தொழிலதிபர்களும், கலைஞர்களும் இப்பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.

இந்த பதவியேற்பு விழாவை அகமதாபாத்தில் உள்ள மோடியின் தாய் ஹீரா பென், தொலைக்காட்சி்யில் கண்டுகளித்தார். நரேந்திரமோடி பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்ட போது கைதட்டி நெகிழ்ந்தார்.
