Published on 08/01/2019 | Edited on 08/01/2019

அயோத்தி வழக்கை விசாரிக்க புதிய அமர்வு அமைக்கப்படும் என கடந்த வாரம் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவித்திருந்தார். வரும் பத்தாம் தேதி இந்த அமர்வின் உறுப்பினர்கள் அறிவிக்கப்படுவார்கள் என கூறியிருந்தார். இந்நிலையில் இரண்டு நாள் முன்னதாக இன்றே அந்த அமர்வின் உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார். அதன்படி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அமர்வு தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, நீதிபதி என்.வி.ராமனா, நீதிபதி யூ.யு.லலித் மற்றும் நீதிபதி டி.ஐ.எஸ்.சந்திரச்சுட் ஆகிய நான்கு நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.