
மேற்குவங்கம் மாநிலம், 24 நார்த் பார்கானாஸ் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஜகநாத்பூர் பகுதியில் அனுமதியின்றி ஒரு பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டுவந்தது. இந்நிலையில், இன்று(27ம் தேதி) காலை அந்த பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் இதுவரை ஐந்து பேர் பலியாகியுள்ளனர். மேலும், பலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
ஜகநாத்பூர் வெடிவிபத்து குறித்து தகவல் அறிந்ததும், அப்பகுதியில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். மேலும், விபத்தில் பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக 24 நார்த் பர்கானாஸ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் விபத்து நடந்தபோது ஆலையில் நிறைய தொழிலாளர்கள் இருந்தனர். பலர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இதுவரை ஐந்து பேர் பலியாகியுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.