Published on 28/02/2019 | Edited on 28/02/2019
![hjgh](http://image.nakkheeran.in/cdn/farfuture/BWaF7fXSAvYGXsP28Nh_5xUF0rqfJI34tBUM4utnpKI/1551371010/sites/default/files/inline-images/Watson-Khawaja-std_0.jpg)
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜாவின் சகோதரர் அர்சலான் கவாஜா, போலி பயங்கரவாத சதி தொடர்பாக தன் சக பல்கலைக்கழக மாணவரைச் சிக்கவைக்க போலி ஆவணத்தை உருவாக்கியதாக கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சிறையில் அர்சலான் கவாஜாவை சிலர் அடித்து உதைத்து தாக்கியுள்ளனர். இதனையடுத்து அவரை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தை அணுகினார். ஆனால் நீதிமன்றம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. கவாஜா தரப்பில் 5 லட்சம் ஆஸ்திரேலிய டாலர்கள் தொகை செலுத்தி ஜாமீன் பெற்றுக்கொள்ளுவதாக வேண்டுகோள் வைக்கப்பட்டது. ஆனால் நீதிபதி ஜாமீன் மறுத்தார். இந்நிலையில் சிறையில் உஸ்மான் கவாஜாவின் சகோதரர் தாக்கப்பட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.