கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் 14 பேர் சபாநாயகரிடம் ஏற்கனவே ராஜினாமா கடிதம் அளித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுதாகர் மற்றும் நாகராஜ் ஆகிய இருவர் இன்று சபாநாயகரை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தனர். இதனால் கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மை இழந்துள்ளதால், கர்நாடக அரசு கவிழ அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா ஆளுநரை சந்தித்த நிலையில், ஆளும் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் ராஜினாமா என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கர்நாடகாவில் பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க அதிக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவில் நிலவி வரும் அரசியல் சூழல் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.