உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. மராட்டியத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 70 ஆயிரத்தைக் கடந்து சென்றுள்ளது. தலைநகர் டெல்லியும் கரோனாவின் பிடியில் சிக்கித் தவித்து வருகிறது. தற்போது 5ஆம் கட்ட ஊடரங்கு அமலில் உள்ள நிலையில் நேற்று மேற்கு வங்க அரசு ஊரடங்கை ஜூலை 31 வரை நீடித்திருந்தது. இந்நிலையில் மற்றொரு மாநிலமான ஜார்க்கண்ட் மாநிலத்திலும் ஊரடங்கு அடுத்த மாதம் 31ஆம் தேதி வரை நீடிக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் பல மாநிலங்கள் ஊரடங்கை நீட்டிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.