மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குச் சேர வேண்டிய காப்பீட்டு தொகையை அளிக்க தாமதம் செய்ததாகக் கூறி புனேவில் உள்ள இஃப்கோ டோகியோ ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்குள் புகுந்த சிவசேனா கட்சியினர் அலுவலகத்தைச் சூறையாடினர்.
பருவமழை காலம் தவறி பெய்து பயிர்கள் நாசமானதை அடுத்து, இதற்காக விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய காப்பீடு தொகையை இஃப்கோ டோகியோ நிறுவனம் வழங்காமல் தாமதித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை புனேவில் உள்ள அந்த அலுவலகத்தின் முன்பு கூடிய சிவசேனா கட்சியினர், காப்பீடு தொகையை வழங்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். பின்னர் இஃப்கோ டோகியோஅலுவலகத்திற்குள் புகுந்த அவர்கள் அலுவலகத்தையே முற்றிலும் சூறையாடினர், அங்குள்ள நாற்காலிகள், மேஜைகள் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.