
குஜராத்தில் கடந்த 25 வருடங்களாக தனது நிறுவனத்தில் விசுவாசமாக உழைத்த மூன்று ஊழியர்களுக்கு ஒரு கோடி மதிப்பிலான பென்ஸ் காரை வழங்கிய வைர வியாபாரி. குஜராத்தைச் சேர்ந்த சூரத்தில் ஹரே கிருஷ்னா ஏற்றுமதி நிறுவனம் நடத்திவருபவர் சவ்ஜி தோலாகியா. இவரை சூரத் மற்றும் சவுராஷ்டிரா பகுதியில் சிவாஜிகாகா என்று அழைக்கிறார்கள். மிகுந்த கடின உழைப்பால உயர்ந்துள்ள இவர் தற்போது 6000கோடிக்கு அதிபதி. இவரது நிறுவனத்தில் 5500 பேர் வேலை செய்கிறார்கள். இவர் இதற்கு முன்பும் இவருடைய ஊழியர்களுக்கு பிரமாண்டமான பரிசுகளை வழங்கி அசத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த நிறுவனம் தொடங்கியபோது சிறுவர்களாக வேலைக்கு சேர்ந்த நிலேஷ் ஜடா(வயது40), மகேஷ் சந்திரபாரா (38), மகேஷ் சந்திரபாரா(38) ஆகியோர் தற்போது வரை வேறு எந்த நிறுவனத்துக்கும் மாறாமல் நேர்மையாக உழைப்பதால் பென்ஸ் நிறுவனத்தின் ஜிஎல்எஸ் 350டி எஸ்யுவி காரை பரிசாக வழங்கியுள்ளார். இவர்கள் மூவரும் தற்போது இந்த நிறுவனத்தின் பெரும் துறைகளில் தலைமை தாங்குவதாகவும் தெரிகிறது.