Published on 21/07/2021 | Edited on 21/07/2021
![Earthquake in Rajasthan ... Public fear](http://image.nakkheeran.in/cdn/farfuture/aKqCcRHGOCVyxuwHe7upmEkBAvDCHYnnYbYiryOpizM/1626834131/sites/default/files/inline-images/rajas1.jpg)
ராஜஸ்தானின் ஒரு பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நில அதிர்வு காரணமாக பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் பிக்கெனரில் அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த மக்கள் அலறியடித்தனர். ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் லேசாக அதிர்ந்தன. அதிகாலை சுமார் ஐந்தரை மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. அதேபோல் லடாக்கில் அதிகாலையில் உணரப்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளது