Published on 19/07/2020 | Edited on 19/07/2020

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவி மனித சமூகத்தை அச்சுறுத்தி வருகிறது. லட்சகணக்கான மக்கள் இந்நோய் காரணமாக பலியாகியுள்ளனர். உலகம் முழுவதும் பல மருந்து ஆராய்ச்சி நிறுவனங்கள் கரோனாவுக்கான தடுப்பு மருந்தைக் கண்டறியும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளன.
இதற்கிடையில், கரோனாவுடன் போராட பசுவின் கோமியத்தை அருந்த வேண்டும் என்று மேற்கு வங்க பாஜக தலைவர் திலிப் கோஷ் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், கழுதைகளுக்கு பசுவின் மதிப்பு ஒருபோதும் தெரியாது என்றும், பசுவின் மதிப்பு மது அருந்துவோருக்கு எப்படி தெரியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். பசுவை கடவுளாக வணங்க வேண்டும் என்றும் பசுவை கிண்டல் செய்பவர்களை புறந்தள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.