
திருநெல்வேலி கொலை வழக்கு குற்றவாளிக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் செட்டிகுளம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் வைகுண்டம். இவரைக் கடந்த 2022ஆம் ஆண்டு செல்வராஜ் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதன் தொடர்ச்சியாக செல்வராரஜை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தெரியவந்தது. மேலும் இந்த வழக்கு தொடர்பான விசாரணை திருநெல்வேலி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று (06.03.2025) தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி செல்வராஜுக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.