நாளை காலை பத்து முப்பது மணிக்கு அயோத்தி வழக்கில் பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக உச்சநீதிமன்றம் அறிவித்திருக்கும் நிலையில் உத்தரப்பிரதேசத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப் படுத்தப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே 144 தடை அங்கு அமலில் உள்ளது. அயோத்தியில் மதுரா, வாரணாசியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உபியில் அனைத்து கல்வி நிலையங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை முதல் நவம்பர் 11ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த தீர்ப்பு தொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திரமோடி, அயோத்தி வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் அது யாருடைய வெற்றியாகவும் தோல்வியாகவும் இருக்காது. நாளைய தீர்ப்பு நாட்டின் அமைதி, ஒற்றுமை மற்றும் நல்லெண்ணத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும். நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு நாம் அனைவரும் நல்லிணக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அதேபோல் வதந்திகளை நம்பவேண்டாம் சட்டம்-ஒழுங்கு தீவிர கண்காணிப்பில் உள்ளது என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
अयोध्या पर सुप्रीम कोर्ट का जो भी फैसला आएगा, वो किसी की हार-जीत नहीं होगा। देशवासियों से मेरी अपील है कि हम सब की यह प्राथमिकता रहे कि ये फैसला भारत की शांति, एकता और सद्भावना की महान परंपरा को और बल दे।
— Narendra Modi (@narendramodi) November 8, 2019