தென் கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக மாறினால் அதற்கு வைக்கப்படும் பெயரை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று நேற்று மாலை புயலாக மாறியது. முன்னதாக காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக உருமாறினால் அதற்கு ‘பிபோர்ஜோய் புயல்’ எனப் பெயர் வைக்கப்படும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதே போல் புயலுக்கு ‘பிபோர்ஜோய் புயல்’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. வங்க தேசம் பரிந்துரைத்துள்ள இந்த புயலுக்கு தமிழில் ‘ஆபத்து’ என்று பொருள்.
இந்த புயல் இன்று வடக்கு நோக்கி நகர்ந்து தீவிர புயலாக மாறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் கேரளா முதல் மகாராஷ்டிரா வரையிலான, நாட்டின் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் மழை தீவிரமடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரபிக் கடலின் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் கரை திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.