Skip to main content

அதிர்ச்சி தரும் தடுப்பூசி புள்ளிவிவரம்! - அதிகம் வீணடித்த தமிழ்நாடு!

Published on 20/04/2021 | Edited on 20/04/2021

 

corona vaccine

 

இந்தியாவில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பரவலை கட்டுக்குள் வைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக மக்களுக்குக் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் வேகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சில மாநிலங்கள் கரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளன. இதனால் அம்மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் உரசல் ஏற்பட்டுள்ளது.

 

இந்தநிலையில் கரோனா தடுப்பூசி வீணடிக்கப்பட்டது தொடர்பான புள்ளிவிவரம் ஒன்று, தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக வெளிவந்துள்ளது. ஏப்ரல் 11 வரையிலான அப்புள்ளி விவரத்தின்படி, இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் அதிக அளவிலான தடுப்பூசிகளை வீணடித்துள்ளது. தமிழ்நாடு 12 சதவீதத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசிகளை வீணடித்துள்ளது. அதற்கடுத்தடுத்த இடங்களில் ஹரியானா (9.74%), பஞ்சாப் (8.12%), மணிப்பூர் (7.8%) மற்றும் தெலுங்கானா (7.55%) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

 

அதேநேரத்தில் கேரளா, மேற்கு வங்கம், இமாச்சலப் பிரதேசம், மிசோரம், கோவா, டாமன் மற்றும் டையு, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவு ஆகிய இடங்களில் தடுப்பூசி சிறிதளவு கூட வீணடிக்கப்படவில்லை என அந்தப் புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்