இந்தியாவில் கரோனா பரவல் தீவிரமாகியுள்ளது. நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. இந்திய அரசு கரோனாவைக் கையாளும் விதம் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடுமையான விமர்சித்துவருகின்றன.
இந்தநிலையில், கரோனா இரண்டாவது அலைக்கு மத்திய அரசும் காரணம் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். கரோனாவை நேர்மறையாக கையாள்வது குறித்து நடைபெற்றுவரும் நிகழ்வில் அவர், “அரசாங்கம், நிர்வாகம், மக்கள் என யாராக இருந்தாலும், மருத்துவர்களின் எச்சரிக்கையை மீறி பாதுகாப்பு நடைமுறைகளைக் கைவிட்டனர். அதுவே நாம் தற்போது சந்திக்கும் சூழ்நிலைக்கு காரணம்" என கூறியுள்ளார்.
மேலும் அவர், மருத்துவர்கள் மூன்றாவது அலை குறித்து எச்சரிக்கின்றனர் என்றும், தற்போதைய அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்டு அரசும் மக்களும் அதற்குத் தயாராக வேண்டுமென்றும் கூறியுள்ளார்.