காஷ்மீரில் பாஜகவுடன் பிடிபி எனப்படும் மக்கள் ஜனநாயக கட்சி கூட்டணி வைத்து ஆட்சி செய்து வந்தது. இந்த ஆட்சியில் முதல்வராக பிடிபி தலைவர் மெகபூபா முப்தி பதவி வகித்தார். கருத்து வேறுபாடு காராணமாக பாஜக அவர்களுக்கு தந்த ஆதரவை திரும்ப பெற்றது. இதனை அடுத்து அங்கு ஜனாதிபதி ஆட்சி நடைபெற்றது. இந்த ஆட்சி டிசம்பர் 19ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஜனாதிபதி ஆட்சி அமைந்தபோதிலும் அங்கு இன்னும் சட்டசபை கலைக்கப்படவில்லை.
இந்நிலையில், இந்நிலையில், காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய மாநாடு கட்சி, காங்கிரஸ் ஆகியவை கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளன. இது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. மக்கள் ஜனநாயக கட்சியின் அல்தாப் புகாரியை முதல்வர் பதவிக்கு 3 கட்சிகளும் முன்மொழிந்துள்ளன. இதில் இறுதி முடிவு விரைவில் எடுக்கப்பட உள்ளது. கூட்டணி அமைப்பதை அல்தாப் புகாரியும் உறுதி செய்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாஜக எம்.எல்.ஏ கவிந்தர் குப்தா, இவர்கள் கூட்டணி பின்னணியில் பாகிஸ்தான் உள்ளது. கூட்டணி தொடர்பான ஆலோசனை கூட்டத்தை துபாயில், பாகிஸ்தான் ஏற்பாடு செய்ததாக கூறியுள்ளார்.