Skip to main content

இந்தியாவில் 700 ஐ நெருங்கியது கரோனா தொற்றுள்ளோர் எண்ணிக்கை

Published on 26/03/2020 | Edited on 26/03/2020

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 4,86,702 என்ற எண்ணிக்கையிலும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,17446 என்ற அளவிலும் இருக்கிறது. தற்பொழுது கரோனா தொற்றால் உலக அளவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22,020 ஆகும். கடந்த 24 மணி நேரத்தில் ஸ்பெயினில் மட்டும் கரோனா வைரஸால் 1098 பேர் உயிரிழந்து உள்ளனர். 

 

 Corona infection is close to 700 in India


இந்நிலையில் இந்தியாவில் கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 694  என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கரோனா பாதிப்பில் 16 பேர் உயிரிழந்த நிலையில், 45 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 121 பேரும், கேரளாவில் 110 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது மத்திய சுகாதாரத்துறை.

 

 

சார்ந்த செய்திகள்