கர்நாடக முன்னாள் முதல்வரான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனும், காபி டே நிறுவனத்தின் உரிமையாளருமான சித்தார்த் நேற்று இரவு திடீரென மாயமான நிலையில் தற்போது அவரது உடல் நேத்ராவதி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்எம் கிருஷ்ணா மருமகன் சித்தார்த்தாவின் உடல் இரண்டு நாள் தேடுதலுக்கு பின் நேத்ராவதி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது. கடந்த 29ஆம் தேதி மங்களூரு அருகே காரில் சென்றுள்ளார் சித்தார்த்தா. தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் மனஉளைச்சலில் காரை விட்டு இறங்கிய சித்தார்த்தா நேத்ராவதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.


மின்ட் ட்ரீ நிறுவனத்தின் பங்குகளை அண்மையில் விற்ற நிலையில் அதேபோல் தனது கஃபே காபி டே நிறுவனத்தையும் கொக கோலா நிறுவனத்திற்கு விற்க சித்தார்த்தா பேசி வந்துள்ளார். இந்நிலையில் கடன் தொல்லையில் இருந்த அவர் ஒரு தொழிலதிபராக தோற்றுவிட்டேன் என தனது ஊழியர்களுக்கு கடிதம் எழுதிவைத்துவிட்டு நேற்று முன்தினம் காணாமல் போனார். கடந்த இரண்டு நாட்களாக அவரது உடல் தீவிரமாக தேடப்பட்டு வந்த நிலையில் அவரது உடல் தற்போது நேத்ராவதி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.