Skip to main content

54 பிராமணர் அல்லாத அர்ச்சகர்கள், 7 பட்டியலின அர்ச்சகர்கள்...

Published on 29/10/2018 | Edited on 29/10/2018
devasam


கேரளாவில் கடந்த ஆண்டு முதன் முறையாக பிராணர் அல்லாத பூசாரிகள் கோவில்களில் பூஜைகள் மேற்கொள்ள நியமிக்கப்பட்டனர். இதில் சுமார் 36 பிராமணர் அல்லாத பூசாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். இதனை அடுத்து மேலும் பலர் இவ்வாறு நியமிக்கப்படுவார்கள் என்று கேரள அரசு தெரிவித்திருந்தது.

 

இந்நிலையில், பிராமணர் அல்லாத  7 பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்கள் உள்பட பிராமணர்கள் அல்லாத 54 பேர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை அர்ச்சகர்களாக கொச்சி தேவசம் போர்டு நியமித்துள்ளது. தேவசம் போர்டு தேர்வாணைய குழு, இவர்களுக்கு எழுத்து தேர்வு, நேர்காணல் ஆகிய தேர்வுகள் வைத்து நியமித்துள்ளது. இதில் 31 பேர் தகுதி அடிப்படையில் தேர்வாகியுள்ளனர். நியமிக்கப்பட்ட 70 அர்ச்சகர்களில் 54 பேர் பிராமணர் அல்லாதவர்கள். கேரளாவிலுள்ள அனைத்து கோவில்களும் தேவசம் போர்டு கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்