Skip to main content

பீட்சா ஆர்டர் செய்து 95 ஆயிரம் பணத்தை இழந்த ஐடி ஊழியர்!

Published on 06/12/2019 | Edited on 06/12/2019

பெங்களூரைச் சேர்ந்த ஐடி ஊழியரான ஷேக் என்பவர் பிரபல உணவு டெலிவரி ஆப்பில் பீட்சா ஆர்டர் செய்துள்ளார். ஆனால் ஆர்டர் செய்து ஒரு மணி நேரமாகியும் உணவு டெலிவரி செய்யப்படாததால் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு ஃபோன் செய்து கேட்டுள்ளார். அப்போது அவரிடம் பேசிய நபர், ஷேக்கின் ஆர்டர் ஹோட்டலால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை எனவும், அதற்காக செலுத்திய பணம் திருப்பி தங்களுடைய கணக்கில் செலுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அதற்காக ஷேக் தனக்கு வரும் ஒரு லிங்கை க்ளிக் செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.



இதையடுத்து தன் ஃபோனிற்கு அனுப்பப்பட்ட லிங்க் ஒன்றை அவர் க்ளிக் செய்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து 95 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. அதன்பிறகே கூகுளில் கிடைத்த தவறான எண்ணால் தான் ஏமாற்றப்பட்டதை அவர் அறிந்துள்ளார். தன் தாயின் புற்றுநோய் சிகிச்சைக்காக சேர்த்து வைத்திருந்த பணத்தை இழந்த ஷேக் இதுகுறித்து உடனடியாக போலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளார். அதனடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்