Skip to main content

எரிவாயு கிணற்றில் ஏற்பட்ட பயங்கர தீ!!! தீயணைப்பு வீரர்கள் இருவர் உயிரிழப்பு!!!

Published on 10/06/2020 | Edited on 10/06/2020

 

assam natural gas well fire accident

 

அசாம் மாநிலம், தின்சுகியா மாவட்டத்தில் இயற்கை எரிவாயு சேகரிக்கப்படும் கிணறு ஒன்றில் தீவிபத்து ஏற்பட்ட நிலையில், அப்பகுதியில் இரண்டு தீயணைப்பு வீரர்களின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 


அசாம் மாநிலம், தின்சுகியா மாவட்டத்தில் இயற்கை எரிவாயு சேகரிக்கப்படும் கிணறு ஒன்றில் கடந்த 14 நாட்களாகக் கசிவு ஏற்பட்டிருந்த நிலையில், நேற்று இந்தக் கிணற்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது, இந்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடிவருகின்றனர். இந்த நிலையில், காணாமல்போன ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் இரண்டு தீயணைப்பு வீரர்களின் உடல் எண்ணெய் கிணறு தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் நடந்த இடத்தை சுற்றி 50 மீட்டர் சுற்றளவில் தீ பரவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் எண்ணெய் கிணறு தொடர்ந்து எரிவாயுவை வெளியேற்றி வருவதால் தீ தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் பிரதமர் நரேந்திர மோடியுடன் அப்பகுதியின் நிலை குறித்து ஆலோசனை நடத்தினார்.

 

 


இதுகுறித்து பேசிய சர்பானந்தா சோனோவால், "தீ இப்போது 50 மீட்டர் பரப்பளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நிலைமையை கட்டுப்படுத்த 25-28 நாட்கள் தேவை என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். அந்தப் பகுதியிலிருந்து மக்களை வெற்றிகரமாக வெளியேற்றியுள்ளோம். பிரதமர் மோடி மாநிலத்திற்கு தேவையான முழு உதவியையும் செய்வதாக உறுதியளித்துள்ளார்," எனத் தெரிவித்தார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Petition against Prime Minister Modi dismissed

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 26 ஆம் தேத் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை வழக்கறிஞர் ஆனந்த் ஜோன்டேல் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, மதம், கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார். மேலும் பிரதமரின் இத்தகைய பேச்சு மக்கள் பிரதிநித்துவ சட்டத்திற்கு எதிரானது. எனவே பிரதமர்  மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் வேண்டும். இது குறித்த உத்தரவை தேர்தல் ஆணையத்திற்கு பிறப்பிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Petition against Prime Minister Modi dismissed

இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 26 ஆம் தேதி (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. ஆனால் அன்றைய தினம் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (29.04.2024) விசாரணைக்கு வந்தது அப்போது, நீதிபதிகள், “இந்த மனு முற்றிலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட மனுவாக தான் கருதுகிறோம்” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

பர்னிச்சர் கடையில் பயங்கர தீ விபத்து; 10 லட்ச ரூபாய் பொருட்கள் சேதம்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
fire breaks out in furniture shop at midnight in Erode

ஈரோடு பெரியவலசு, கொங்கு நகர் 3-வது வீதியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவர் அதே பகுதியில் கடந்த பல வருடங்களாக வீடு மற்றும் கடைகளுக்கு தேவையான பர்னிச்சர் பொருள்களை தயார் செய்து விற்பனை செய்து வருகிறார். இவரது கடையில் சுமார் 5-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். கடையில் மரச் சாமான்கள் அதிக அளவில் இருந்தன.

இந்த நிலையில் பொன்னுச்சாமி நேற்று இரவு வேலையை முடித்து விட்டு வழக்கம் போல் கடையை பூட்டிச் சென்று உள்ளார்.  நள்ளிரவு 2 மணி அளவில்  இவரது கடையில் இருந்து தீ பரவி வருவதாக அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் . சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர்  தீயை அணைக்க போராடினர். மர சாமான்கள் மற்றும் எந்திரங்கள் அதிக அளவில் இருந்ததால் தீ கொளுந்து விட்டு எரிந்தது.

தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில்  கடையில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள மரப் பொருள்கள் மற்றும் மெஷின்கள் முற்றிலும் சேதம் அடைந்தன. மின் கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததா அல்லது வேறு ஏதாவது காரணமா என வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நல்ல வேலையாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. தீ விபத்து பர்னிச்சர் கடையை சுற்றி ஏராளமான குடியிருப்புகளும் இருந்தன.