8 வயது சிறுவன் பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ளது ஈத் மாவட்டம். இங்குள்ள அடர்ந்த வனப்பகுதியில் 8 வயதுமிக்க சிறுவன் மரமொன்றில் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டுள்ளான். சடலத்தை மீட்ட காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சிறுவன் பதேபூர் கால்சா என்ற கிராமத்தைச் சேர்ந்தவன் என்றும், ஞாயிறு மதியத்தில் இருந்து காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்ததும் தெரியவந்தது.
இதுதொடர்பாக உயிரிழந்த சிறுவனின் தந்தை அளித்த புகாரில், தேவேந்தர் எனும் 28 வயதுமிக்க நபர் கைது செய்யப்பட்டுள்ளான். அதேபகுதியைச் சேர்ந்த தேவேந்தர் ஞாயிறு மதியம் சிறுவனை கடைக்குக் கூட்டிச்செல்வதாக தன்னுடன் அழைத்துச்சென்று, பாலியல் வல்லுறவு செய்து, கழுத்தை நெறித்து கொலைசெய்துள்ளான். மேலும், சடலத்தை தற்கொலை என அடையாளம் காட்ட அருகில் இருந்த மரத்தில் தூக்கிலிட்டு தொங்கவிட்டுள்ளான்.
இந்தப் படுகொலைக்கு முன்விரோதமும் காரணமாக இருந்துள்ளது. அதேபகுதியைச் சேர்ந்த முன்னா என்பவனுக்கும், கொல்லப்பட்ட சிறுவனின் தந்தைக்கும் இடையே நிலத்தகராறு இருந்துள்ளது. இதற்கு பலிதீர்க்கும் விதமாக சிறுவனைக் கொலைசெய்ய முன்னா தேவேந்தரை ஏவிவிட்டது தெரியவந்துள்ளது. குற்றவாளிகள் இருவரின் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர்.