Skip to main content

சிக்கிய ரூ.200 கோடி மதிப்பிலான ஹெராயின்.. குஜராத்தில் பயங்கரம்

Published on 15/09/2022 | Edited on 15/09/2022

 

6 pakistanies arrested in gujarat  jakhau harbour

 


அரபிக்கடல் வழியாக போதைப் பொருள் கடத்தப்படுவதாக எழுந்த புகாரின் பேரில் குஜராத் கடலோரப்பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

 

அம்மாநிலத்தின் கட்ச் மாவட்ட கடலோரக் காவல் படை மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஜாகுவா மீன் பிடி துறைமுகத்தை நோக்கி வந்த படகு ஒன்றை கண்ட அதிகாரிகள் அதைச் சுற்றி வளைத்தனர். படகைக் கைப்பற்றிய அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது படகில் ஹெராயின் பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் படகிலிருந்த 6 பேரையும் துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர். 

 

கைது செய்யப்பட்டவர்களை விசாரித்த அதிகாரிகளுக்கு அவர்கள் கொடுத்த தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் படி அவர்கள் அனைவரும் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் இந்த போதைப் பொருட்கள் அனைத்தும் ஹெராயின் என்பதும் தெரிய வந்தது. மேலும், அரபிக்கடல் வழியாக அந்த போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு குஜராத்திற்குக் கொண்டு வரப்படும் எனவும் அங்கிருந்து சாலை மார்க்கமாகப் பஞ்சாப் மாநிலத்திற்குக் கடத்தப்படும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து அவர்களை கைது செய்த போலிசார் சாலை மார்க்கமாக பஞ்சாப் கொண்டு செல்ல காத்திருந்தவர்களையும் கைது செய்தனர்.   

 

கடத்தப்பட்ட போதைப் பொருட்கள் மொத்தமாக 200 கோடி ரூபாய் வரை இருக்கலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர். 

 

சார்ந்த செய்திகள்