Skip to main content

13 கரோனா நோயாளிகள் தப்பி ஓட்டம்; தேடும் பணி தீவிரம் - பஞ்சாபில் பரபரப்பு!

Published on 07/01/2022 | Edited on 07/01/2022

 

PUNJAB AIRPORT

 

இந்தியாவில் கரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது . அதேபோல் ஒமிக்ரான் வகை கரோனா பாதிப்பின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்தநிலையில் இத்தாலியில் இருந்து பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு தனி விமானத்தில் வந்த 179 பேரில், 125 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

 

இதனையடுத்து கரோனா தொற்று பாதிக்கப்பட்ட அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்தநிலையில் இதில் 13 பேர் சுகாதாரத்துறை அதிகாரிகளை ஏமாற்றிவிட்டு, மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதனையடுத்து தப்பி ஓடிய கரோனா பாதிக்கப்பட்ட நபர்களை தேடும் தற்போது நடைபெற்று வருகிறது.

 

இதற்கிடையே தப்பி ஓடிய 13 பேரின் பாஸ்போர்ட்டை முடக்கவுள்ளதாக அமிர்தசரஸ் துணை ஆணையர் குர்பிரீத் சிங் கெஹ்ரா கூறியுள்ளார். மேலும் தப்பி ஓடியவர்கள் காலைக்குள் திரும்பி வரவில்லையென்றால், அவர்கள் மீது தொற்றுநோய் சட்டம் மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்