Skip to main content

சிக்கன் தின்றுவிட்டு கோவிலுக்குள் சென்ற ராகுல்காந்தி - பாஜக கடும் தாக்கு

Published on 13/02/2018 | Edited on 20/02/2019

 

சிக்கன் தின்றுவிட்டு கோவிலுக்குள் சென்று, இந்துக்களின் உணர்வுகளை ராகுல்காந்தி கொச்சைப்படுத்துவதாக கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா குற்றம்சாட்டியுள்ளார்.

 

RaghulGandhi

 

கர்நாடக மாநிலத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலையொட்டி, அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி. இந்நிலையில், நேற்று கோப்பால் மாவட்டத்தில் உள்ள கனகாச்சல லஷ்மி நரசிம்மா கோவிலுக்கு அவர் சென்றுள்ளார். 

 

இதுகுறித்து கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா, ’ஒரு பக்கம் 10 சதவீதம் முதல்வராக இருப்பவரான சித்தராமையா மஞ்சுநாதா கோவிலுக்கு மீன் தின்றுவிட்டு செல்கிறார். இன்னொரு பக்கம் தேர்தல் சமயங்களில் மட்டும் இந்துவாக இருக்கும் ராகுல்காந்தி, நரசிம்மா கோவிலுக்கு ஜவாரி சிக்கனைத் தின்றுவிட்டு செல்கிறார். காங்கிரஸ் எதற்காக இந்துக்களின் உணர்வுகளை இப்படி தொடர்ச்சியாக கொச்சைப்படுத்துகிறது? எல்லோரும் சமம் என்று சொல்வது சமாஜாவாத் (சோசலிசம்). ஆனால், உங்களுடையது மஜாவாத் (என்ஜாய்மெண்ட்)’ என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

கடந்த ஆண்டு சித்தராமையா மீதான குற்றச்சாட்டைத் தற்போது எடியூரப்பா மீண்டும் பொதுவெளிக்குக் கொண்டுவந்துள்ளார். ஆனால், அப்போதே சித்தராமையா இந்தக் குற்றச்சாட்டை மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்