Published on 12/11/2018 | Edited on 12/11/2018

மத்திய அமைச்சர் அனந்தகுமார்(வயது59) காலமானார். பெங்களூருவில் அதிகாலை 2 மணி அளவில் அவரின் உயிர் பிரிந்தது.
புற்றுநோயால் அவதிப்பட்டு கடந்த 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த அவர் பெங்களூருவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை காலமானார்.
மத்திய ரசாயணம், உரம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக இருந்தவர் அனந்தகுமார். அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பில் இணைந்து அரசியல் வாழ்வை தொடங்கியவர். 1987ல் பாஜகவில் இணைந்த அனந்தகுமார் கர்நாடக மாநில இளைஞரணி தலைவரானார். பெங்களூரு தெற்கு தொகுதியில் இருந்து 6 முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.